சுவையான செட்டிநாட்டு நண்டு குழம்பு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து, உப்பு போட்டு பத்து நிமிடம் வேகவைத்துக் கொள்ளவும்.
சின்ன வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய் ஆகியவற்றை நறுக்கி வைத்துக் கொள்ளவும். பூண்டை தோல் உரித்து தட்டி வைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலுடன் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயம், கத்தரிக்காய், தக்காளி ஆகியவற்றை ஒரு கடாயில் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்துக் கொதிக்க விடவும். பின்னர் அதனுடன் மிளகாய் தூள், தேங்காய் விழுது, உப்பு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
காய்கறிகள் வெந்ததும் நண்டை சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் சோம்பு, பட்டை,சீரகம், வெந்தயம், பூண்டு போட்டு சிவக்க வதக்கி குழம்பில் சேர்க்கவும். பின்னர் கொத்தமல்லித் தழையை சேர்த்துக் கொள்ளவும். இப்போது சுவையான செட்டிநாடு நண்டு குழம்பு தயார்.
+ There are no comments
Add yours