இனி இப்படி தக்காளி தோசை செய்து பாருங்க. செம்ம சுவையா இருக்கும்.
தேவையான பொருட்கள்
தோசை மாவு – 2 கப்
தக்காளி – 2
வெங்காயம் – 1
வரமிளகாய்- 2
பூண்டு – 2
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி
உப்பு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து தக்காளி, வெங்காயம் நறுக்கியதை எடுத்துகொண்டு வதக்க வேண்டும். தொடர்ந்து இதை மிக்ஸியில் சேர்த்து அத்துடன் உப்பு, பூண்டு, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து அரைத்துகொள்ளவும். தொடர்ந்து இதை தோசை மாவில் சேர்த்து கிளர வேண்டும். தொடர்ந்து வழக்கம் போல் தோசை சுட வேண்டும்.
+ There are no comments
Add yours