அதிக வெப்பத்தின் காரணமாக கூந்தல் வறண்டு, பொலிவிழந்து காணப்படும். கூந்தலை பராமரிக்க சில ஆரோக்கியமான டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.
தேங்காய் எண்ணெய் மசாஜ்:
தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி நன்கு 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும்.
குறிப்பாக இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
தயிர்:
கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சனை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
எலுமிச்சை:
கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றது, அதாவது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து, பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை அலச வேண்டும்.
இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். மேலும் பொடுகு தொல்லை நீங்கும், அதேபோல் முடி உதிர்வு பிரச்சனை தடுக்கப்படும்.
கற்றாழை:
கற்றாழையில் உள்ள ஜெல்லை எடுத்து கூந்தலில் தடவி குளிக்கலாம். கற்றாழையில் இருக்கும் ஈரப்பதமும் வழவழப்பும் கூந்தலுக்கு வேண்டிய போஷாக்கை தரும். கற்றாழை கூந்தலின் அடர்த்தியை அதிகரிப்பதோடு வளர்ச்சியையும் ஊக்குவிக்கிறது.
கூந்தலுக்கும் சருமத்துக்கும் கற்றாழை சாறை மட்டும் தடவினாலே கோடை வெயிலில் இருந்து எளிதாக தப்பிக்கலாம். உச்சி முதல் உள்ளங்கால் வரை அனைத்துக்கும் ஏற்ற பொருள் இந்த கற்றாழைதான்.
+ There are no comments
Add yours