உங்கள் கண்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமெனில், உங்கள் டயட்டில் சில குறிப்பிட்ட உணவுகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். இது பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இப்போது தெரிந்துகொள்வோம்.
மீன்: உங்கள் டயட்டில் மீனை சேர்த்துக் கொண்டால், அதில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உங்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என மருத்துவ இதழ்கள் கூறுகின்றன.
உலர் பழங்கள்: உங்கள் டயட்டில் பல்வேறு வகையான உலர் பழங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதில் வைட்டமின் ஈ சத்துகள் அதிகமுள்ளதால், வயதாவதால் வரக்கூடிய கண் பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. பிரேசில் நட்ஸ், முந்திரி, வேர்க்கடலை, பருப்பு வகைகள் போன்றவற்றை நீங்கள் தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
நட்ஸ்: உலர் பழங்கள், பருப்பு வகைகள், நட்ஸ் மற்றும் பல்வேறு வகையான நட்ஸ்கள் நம் பார்வையை மேம்படுத்தி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஆகையால் சியா விதைகள், ஆளி விதைகள், சணல் விதைகள் போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். மேலும் இதில் நட்ஸில் அதிகமாக வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா-3 நிறைந்துள்ளது.
சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் போன்றவை நிறைந்துள்ளன. இது கண்கள் பாதிப்படையாமல் பாதுகாக்க உதவுகிறது.
பச்சைக் காய்கறிகள்: பச்சை இலை காய்கறிகளும் கண்களைப் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் லுடீன், ஜியாக்சாண்டின் மற்றும் கண்களுக்கு உகந்த வைட்டமின் சி ஆகியவை அதிகமுள்ளது. ஆகையால் இவற்றை தினசரி டயட்டில் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
கேரட்: வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை கேரட்டில் அதிகம் உள்ளது. கண்ணில் உள்ள புரதங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுவதன் மூலம் விழித்திரை ஒளியை உறிஞ்சுவதற்கு உதவி செய்கிறது.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது. கேரட்டைப் போலவே, சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் அதிகமுள்ளது. இதில் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். இதுதவிர முட்டை மற்றும் இறைச்சியும் கூட கண்களுக்கு ஆரோக்கியமான உணவாகும்.
+ There are no comments
Add yours