மருத்துவ குணம் உள்ள செடி வகைகளில் ஒன்று கீழாநெல்லி ஆகும். கீழாநெல்லி ஒரு சிறிய செடி வகையைச் சார்ந்தது. இலைகளுக்கு அடியில் இதன் காய்கள் உள்ளதால் இது கீழ்காய் நெல்லி என்று பெயர் பெற்றது.
கீழாநெல்லியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால் சித்த வைத்தியத்தில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. கீழாநெல்லியில் உள்ள மருத்துவ குணங்கள் சிலவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.
கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.
விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது.
பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும்.
மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.
கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்.
கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.
கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.
கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.
கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.
வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.
+ There are no comments
Add yours