அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இறால் மற்றும் சேப்பங்கிழங்கை பயன்படுத்தி ஒரு சுவையான புளிக்குழம்பினை எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
இறால்- கால் கிலோ
சேப்பங்கிழங்கு-கால் கிலோ
புளி- 1 எலுமிச்சை அளவு
பெரிய வெங்காயம் -3
தக்காளி- 1
பச்சை மிளகாய்- 2
மிளகாய் தூள் -1 டேபிள் ஸ்பூன்
தனியாத் தூள்- 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்
உப்பு -தேவைக்கேற்ப
சீரக தூள்- அரை டீஸ்பூன்
வெந்தய பொடி- அரை டீஸ்பூன்
கடுகு -அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
கொத்தமல்லி தழை- 1 கைப்பிடி அளவு
தேங்காய் பால் -அரை கப்
எண்ணெ- தேவையான அளவு
செய்முறை:
சேப்பங்கிழங்கை நன்றாக கழுவி குக்கரில் வேக வைத்து தோலுரித்து பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து வைக்க வேண்டும். தக்காளியை அரைத்து வைக்க வேண்டும்.
வாணலியில் எண்ணெய், கடுகு போட்டு தாளித்து இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு வதக்கவும். பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கறிவேப்பிலை சேர்த்து அதே எண்ணெயில் எல்லா மசாலா தூள்களையும் போட்டு நன்கு வதக்கவும்.
இதனுடன் அரைத்த தக்காளியை சேர்த்து கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேகவிடவும். பிறகு புளிக்கரைசலை சேர்க்கவும்.
பின்னர் இறாலை நறுக்கி போட்டு, மேலும் கொதிக்க விடவும்.
கடைசியில் வேக வைத்துள்ள சேப்பங்கிழங்கு, தேங்காய் பால், கொத்தமல்லி தழை எல்லாம் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.
இப்போது சுவையான இறால் சேப்பக்கிழங்கு புளி குழம்பு தயார்.
இந்த குழம்பினை சாதம், கூட்டு, இட்லி, தோசைக்கு வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும் .
+ There are no comments
Add yours