பால் பற்றி பல்வேறு கட்டுக்கதைகள் நிலவுகின்றன. சிலர் பாலில் நிறைய கால்சியம் இருக்கிறது. தினமும் குடிக்க வேண்டும் என்கிறார்கள்.
சிலர் குறிப்பிட்ட வயதுக்கு மேல் பாலை தவிர்ப்பது நல்லது என்கிறாகள். இப்படி இருவேறு கருத்துக்கள் இருக்கின்றன. அவை இரண்டுக்குமே காரண காரியங்கள் சொல்லப்படுகின்றன.
அந்த வகையில் ஒரு நாளைக்கு ஒருவர் எவ்வளவு பால் குடிக்கலாம் என்பது குறித்த பார்ப்போம்.
பால் எடுத்துக் கொள்ளும் அளவு வயது, பாலினம், மருத்துவ நிலை, ஊட்டச்சத்து தேவை ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். சராசரியாக குறைந்தபட்சம் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவாக உலக சுகாதார நிறுவனம் சில பரிந்துரைகளை வழங்குகிறது.
அந்த வகையில், ஒரு நாளைக்கு 1.5 கப் (12 அவுன்ஸ்) அளவு எடுத்துக் கொள்வது போதுமானது. யோகர்ட், சீஸ், பனீர் எல்லாவற்றையும் சேர்த்து.
சிறுவர்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்?
பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கு கால்சியத்தின் தேவை கொஞ்சம் கூடுதலாக இருக்கும்.
எலும்புகள், பற்கள் வளர்ச்சிக்குரிய பருவம் என்பதால் அவர்களுடைய கால்சியம் தேவையின் அளவு மாறுபடும். அதனால் பால் மற்றும் பால் பொருள்களின் அளவிலும் பெரியவர்களை விட சிறுவர்களுக்கு கொஞ்சம் கூடுதலாகத் தேவைப்படும். எனவே அவர்கள் ஒரு நாளைக்கு 2 கப் வரை பால் குடிக்கலாம்.
அதேநேரத்தில், மீன் உணவுகள், எலும்பு சூப், ஆகியவற்றை எடுத்துக் கொள்பவராக இருந்தால் பால் மற்றும் பால் பொருள்களின் அளவைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
+ There are no comments
Add yours