அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணக்கூடிய குடல் குழம்பு எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஆட்டு குடல்
சின்ன வெங்காயம் -1 கப்
பட்டை கிராம்பு
தக்காளி -1
பெருஞ்சீரகம் -1 ஸ்பூன்
மஞ்சள் தூள்- 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள்- 1ஸ்பூன்
உப்பு
எண்ணெய்
இஞ்சி பூண்டு விழுது
தேங்காய்- 1
செய்முறை:
முதலில் சுத்தம் செய்த குடலை நன்றாக சுடுதண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து எடுத்துக்கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பட்டை, கிராம்பு, பெருஞ்சீரகம், ஆகியவற்றை தாளிக்கவும்.
பின் அதனுடன் மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு மிளகாய் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதனுடன் கொதிக்க வைத்த குடலை போடவும்.
நன்றாக கொதிக்க வைத்து தேவை என்றால் அதனுடன் முருங்கைக்காய் அல்லது உருளைக்கிழங்கு சேர்த்தால் சுவையாக இருக்கும்.
பின் கடைசியாக அரைத்த தேங்காய் சேர்த்து தேவையான கிரேவி பதத்திற்கு கொண்டு வரவும்.
குடல் குழம்பு உடன் இட்லி, தோசை மற்றும் சுடு சோறுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.
+ There are no comments
Add yours