நெல்லிக்கனியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உடலுக்கு சக்தியை அளிப்பதோடு ஏராளமான நோய்களுக்கு மருந்தாகவும் அமைகிறது. நெல்லிக்கனியின் மருத்துவ குணங்களைப் பற்றி பார்க்கலாம்.
நெல்லிக்காயை தினமும் நன்கு மென்று தின்று வர ரத்தசோகை நீங்கும்.
நெல்லிக்காய் சாறு உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, முதுமைத் தோற்றமானது விரைவில் வராமல் தடுக்கும்.
முகம் நன்கு அழகாக பொலிவோடு இருப்பதற்கு, தினமும் காலையில் நெல்லிக்காய் சாற்றுடன், சிறிது தேன் சேர்த்துக் குடிக்க வேண்டும்.
அல்சர் உள்ளவர்கள், தினமும் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்து வந்தால், அல்சரைக் குணப்படுத்தலாம்.
நெல்லிக்காய் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும். நெல்லிக்காயில் இரும்புச்சத்து இருப்பதால், இதனை தினமும் ஒன்று என்ற விதத்தில் உட்கொண்டு வந்தால், புதிய இரத்த செல்கள் உருவாகி, மறைமுகமாக மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பைத் தடுக்கும்.
பெரு நெல்லியை வெந்நீரில் அலசி தயிரில் ஊற வைத்து சாப்பிடலாம். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி, வீரியம் அதிகரிக்கும்.
சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் தினமும் 1 நெல்லிக் காயை சாறு பிழிந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி சத்து உடலில் உள்ள இரும்புச் சத்து உட்கிரகிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது.
ஆப்பிளைவிட 3 மடங்கு புரதச் சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது.
+ There are no comments
Add yours