காட்டுப் பகுதிகளிலும் முள்வேலிகளிலும் காணப்படும் பிரண்டை அதிக மருத்துவ குணம் கொண்டது. வாய், உணவுக் குழல், இரைப்பை, சிறு குடல், பெருங்குடல், ஆசனவாய் ஆகிய இவைகளில் ஏற்படும் அனைத்து வகை பிணிகளுக்கும் பிரண்டை நல்ல மூலிகை மருந்தாக உள்ளது.
பிரண்டையின் மருத்துவ குணங்கள் சிலவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
பிரண்டை உப்பினை 2அ3 அரிசி எடையளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வர வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு தீரும்.
சாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பினை சாப்பிட்டு வர நரம்பு தளர்ச்சி, பலவீனம், தாது இழப்பு ஆகியவை தீரும்.
பிரண்டை வேரை உலர்த்தி பொடித்து 1 கிராம் அளவு காலை,மாலை கொடுத்துவர முறிந்த எலும்புகள் ஒன்று கூடும்.
பிரண்டை உப்பு இரண்டு அரிசி எடை எடுத்துப் பாலில் கலந்து மூன்று வேளை குடித்து வர சிறு குழந்தைகளின் பேதி, வாந்தி, சீதபேதி நுரைத்த பச்சை பேதி நிற்கும். பிரண்டையை துவையல் செய்து சாப்பிட்டு வர அஜீரணம் குணமாகும்.
பிரண்டையை நெய் விட்டு வறுத்து, அரைத்துக் கொட்டைப்பாக்கு அளவு 8 நாள் காலை, மாலை சாப்பிட கருவாயின் தினவும், குருதிப் போக்கும் ஒழியும்.
பிரண்டை சாற்றில் புளி,உப்பு,கலந்து காய்ச்சி பொறுக்கும் சூட்டில் பற்றுப்போட சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம் தீரும். கடைகளில் கிடைக்கும் பிரண்டை உப்பு 2 அரிசி எடைஅளவு 3 வேளை பாலில் கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி தீரும்.
+ There are no comments
Add yours