அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான இரால் தொக்கு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
இறால்- 500 கிராம்
சின்ன வெங்காயம்- 20
தக்காளி- 1
இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை- 1 கொத்து
குழம்பு மிளகாய் தூள்- 4டே.ஸ்பூன்
மல்லி இழை- 1 கொத்து
கறிமசால் பொடி- 1 டீஸ்பூன்
பால்- 1/2 டம்ளர்
நல்லெண்ணய் -3 டீஸ்பூன்
செய்முறை:
கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கிளறி இறாலை அரை மணி நேரம் ஊற வைத்து. பின்னர் நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து சூடு படுத்த வேண்டும். டில் பட்டை, சோம்பு, கிராம்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
கருவேப்பிலை, சின்ன வெங்காயம், சேர்த்து வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது தக்காளி சேர்த்து நன்றாக எண்ணெயில் வதக்க வேண்டும். குழம்பு மிளகாய்த்தூள் கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இதனுடன் சுத்தம் செய்த இறாலை சேர்த்து நன்கு கிளறவும், தண்ணீர் சேர்க்க தேவையில்லை. மூடி போட்டு 10 நிமிடம் வேக வைக்கவும்.
இறுதியாக அரை டம்ளர் பால் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்க வேண்டும். பின்னர் இதனுடன் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்.
அனைவரும் விரும்பி உண்ணும் காரசாரமான மற்றும் சுவையான இறால் தொக்கு தயார்.
+ There are no comments
Add yours