மலச்சிக்கலை நீக்கும் சீந்தில் கொடி

Spread the love

குழந்தைகள் பெரும்பாலும் சளித் தொல்லையால் பாதிக்கப்படுவதுண்டு. இந்த சளி தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க பல வீட்டு வைத்தியங்களை பெற்றோர்கள் செய்வது உண்டு. அந்த வகையில் சுக்கு மிளகு திப்பிலியை பயன்படுத்துவர்.

இதேபோன்று கிராமங்களில் சீந்தில் கொடியை குழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க கொடியின் சிறு துண்டை எண்ணெய்யில் பொரித்து ஆற வைத்து தலைக்குத் தேய்த்து குளிப்பாட்டுவது வழக்கம். ஜலதோஷத்திற்கு சீந்தில் கொடியிலிருந்து மருந்து தயாரிக்கலாம்.

இந்த சீந்தில் கொடியில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன அவற்றில் சிலவற்றை இப்பொழுது பார்க்கலாம்.

சீந்தில் கொடியில் உள்ள ஆன்டி கிளைசமிக் குணங்கள், குளுகோஸ் ரத்தத்தில் அதிகமாவதை தடுத்து, கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அதே போல், ஆஸ்துமா மற்றும் மூச்சிரைப்பு , வறட்டு இருமல் ஆகிய அனைத்தையும் சரிபடுத்துகிறது.

சீந்தில் கொடிச் சாற்றை தேன் கலந்து காலையில் பருகச் செய்தால் காமாலை குணப்படுத்தும்.

சீந்தில் கொடியை மிளகுடன் மைய அரைத்து வெந்நீருடன் உட்கொள்ளச் செய்தால் இதயத்தில் சேர்ந்துள்ள வாதம் நீங்கும்.

நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை முதலிய பிணிகளுக்கு சீந்திலை கஷாயமாகச் செய்து சாப்பிட்டால் பூரணமாக குணமாகும்.

சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது. இதிலுள்ள குணங்கள் காய்ச்சலில் அறிகுறிகளையும் முறியடிக்கிறது. மிகவும் தீவிர காய்ச்சல்களான டெங்கு, மலேரியா மற்றும் ஸ்வைன் ஃப்ளூ ஆகியவற்றை கூட நீக்குகிறது.

சீந்தில் கொடிச் சாற்றை பருகச் செய்தால் வாதத்தால் ஏற்படும் பெரும் பாடு குறையும்.

சீந்தில் இலையை வேப்ப எண்ணெய்யில் வதக்கி புண்ணின் மேல் வைத்துக் கட்டி வந்தால் புண் ஆறும்.

ஆர்த்ரைடிஸ் மற்றும் அதனால் உண்டாகும் கடுமையான மூட்டு மற்றும் இணைப்பு வலிகளை சீந்தில் கொடி கொண்டு குணமாக்கலாம். சீந்தில் தண்டை பொடி செய்து ஆயுர்வேத மருந்தகங்களில் விற்ப்பார்கள். அதனை பாலில் கலந்து கொதிக்க வைத்து, குடித்தால் ஆர்த்ரைடிஸினால் உண்டாகும் பாதிப்புகள் குணமாகும்.

சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும். மலச்சிக்கலை சரிபடுத்தும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

சீந்தில் கொடி எல்லாவிதமான கஷாயங்களிலும் துணைப் பொருளாக பயன்படுத்தலாம்.

வேனிற் காலத்தில் அடிக்கடி வரும் மயக்கம், கிறுகிறுப்பு ஆகிய அனைத்திற்கும் சீந்தில் தண்டுச் சாற்றைப் பசும்பாலில் கலந்து உட்கொண்டால் போதும்.

புண், வீக்கம், கட்டி போன்ற அனைத்திற்கும் சீந்தில் இலையை தணலில் வாட்டிப் போட்டால் குணமாகும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours