இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினி உள்ளிட்டவை எந்தளவுக்கு நல்லதா அந்த அளவுக்கு தீயவையாகவும் உள்ளது.
இதில் இருந்து வெளிப்படும் நீல நிற ஒளி கண்ணுக்கு ஆபத்தாகும். இதனால், கண்களில் அழுத்தம் மற்றும் ரெட்டினல் செல் சேதம் ஏற்படுகிறது.
இதில் இருந்து விடுபட 20-20-20 விதியை பின்பற்றவும். அது என்ன விதி?
வழக்கமான முறையில் உங்கள் கண்களுக்கு பிரேக் தருவது அவசியம். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு முறை 20 அடிக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை 20 வினாடிகள் பார்க்கவும்.
இவ்வாறு செய்யும் பொழுது உங்கள் கண் தசைகள் ஓய்வு பெற்று, நீல நிற வெளிப்பாட்டிற்கான தீவிரம் குறைகிறது.
டிஜிட்டல் சாதனங்களை குறிப்பாக நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்பு டிஜிட்டல் சாதனங்களில் நேரம் செலவழிப்பதை குறைத்துக் கொள்ளுங்கள்.
நீல நிற ஃபில்டர்கள் அல்லது கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டுள்ள கண்ணாடிகளை பயன்படுத்துங்கள்.
உங்கள் சாதனங்களில் இருந்து வெளிவரும் நீல நிற உமிழ்வை குறைப்பதற்கு நீங்கள் ஸ்கிரீன் ஃபில்டர் அல்லது சாஃப்ட்வேர் பயன்படுத்தலாம்.
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் C மற்றும் E, ஜிங்க் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை அன்றாடம் சாப்பிடவும்.
இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ்கள் நீல நிற வெளிப்பாட்டை குறைப்பதற்கு உதவும். குறிப்பாக ரெட்டினல் சேதத்திற்கான அதிக அபாயத்தில் இருப்பவர்களின் கண்களை பாதுகாக்க இது உதவுகிறது.
+ There are no comments
Add yours