நாம் உடல் எடை இழக்க பல்வேறு வகையான டயட்டை பின்பற்றுவோம். இதில் மெடிட்டரேனியன் , அட்லாண்டிக் டயட் என்ற 2 வகையும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில் இதில் எந்த வகை நமக்கு பொருத்தமாக இருக்கிறது என்பதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.
மெடிட்டரேனியன் வகை டயட்டில், தாவர வகை உணவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. ஆரோக்கியமான கொழுப்பு சத்து உள்ள ஆலிவ் எண்ணெய், பருப்பு வகைகள், காய்கறிகள், பழங்கள், சில பால் பொருட்கள் நாம் எடுத்துகொள்ளலாம்.
அட்லாண்டிக் டயட்டில், மீன்கள், உருளைக்கிழங்கு, சிவப்பு மாமிசம் ஆகியவை எடுத்துகொள்ளலாம். ஆரோக்கியமான கொழுப்பு சத்து, மீன்களில் உள்ள ஒமேகா – 3எஸ்-யில் உள்ளது.
மெடிட்டரேனியன் டயட்டில் சிறிய அளவும் வையின் குடிக்கலாம். அட்லாண்டிக் டயட்டில் அப்படி குறிப்பிட படவில்லை. உங்கள் இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க அட்லாண்டிக் டயட்டில் ஓமேகா 3 பேட்டி ஆசிட் உள்ளது. இந்நிலையில் இந்த இருவகை டயட்டையும் நம் பின்பற்றலாம். இதனால் உடல் எடை குறையும். மேலும் இதில் நமக்கு எது சரியாக இருக்கும் என்று தேர்வு செய்வது நல்லது.
+ There are no comments
Add yours