இந்திய தொழில் கூட்டமைப்பு சி.ஐ.ஐ மற்றும் யங் இந்தியன் அமைப்பு சார்பில் “தி உமன் கான்கிளேவ்” என்ற தலைப்பில் முதல் பெண்கள் மாநாடு கோவையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்திய பெண்கள் நெட்வொர்க்கிங் தமிழ்நாடு முன்னாள் தலைவர் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி குடும்பங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ். மலர்விழி – ஆந்திராவின் முதல் பெண் ஐ.பி.எஸ் அதிகாரி அருணா பகுணா – இந்திய கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சிருஷ்தி தாக்கூர் – மோகினி ஆட்டம் எக்ஸ்போன்ட் கோபிகா வர்மா – இகாமர்ஸ் கவின் கேர் இயக்குனர் அமுதவல்லி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி குழுமத்தின் அறங்காவலர் எஸ்.மலர்விழி பேசும்போது, “தலைமை துவக்கத்திற்கும் திறமைக்கும் பாலினம் இல்லை என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும் .ஐ.டி.பற்றி எனக்கு என்ன தெரியும் என்று நான் உணர்ந்திருந்தால் நான் ஐ.டி.நிறுவனத்தை தொடங்கி இருக்க மாட்டேன் எனக்கு கல்வித்துறை பற்றி மட்டுமே தெரியும். மற்ற அனைத்தையும் எந்த ஆதரவும் இல்லாமல் அனுபவத்தின் மூலம் கற்றுக் கொண்டேன்.
சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்ட உள்ள நிலையில் அனைத்து பெண்களும் அனைத்தையும் கற்று தன்னம்பிக்கையுடன் எதையும் செய்ய முடியும் என்று நினைக்க வேண்டும்.” என்றார்.
மேலும் இந்த பெண்கள் மாநாட்டில் 13 துறைகளைச் சேர்ந்த புகழ்பெற்ற பேச்சாளர்கள் தடைகளை தாண்டி முன்னேறிய அவர்களின் பயண அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours