திருப்பதியில் அமைந்திருக்கும் திருமலை வெங்கடேஸ்வரா கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற வழிபட்டு தலமாக உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறையேனும் திருப்பதியில் குடிகொண்டுள்ள எம் பெருமாள் ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும் எனப் பலரும் விரும்புவார்கள்.
இந்நிலையில், திருப்பதி திருமலை வெங்கடேஸ்வரா கோவிலில் ஸ்ரீவாரி ஆர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகள், தங்குமிடம் மற்றும் ஸ்ரீவாரி விருப்ப சேவைகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (டிடிடி) வருகிற ஜூலை மாதம் வெளியிட உள்ளது.
திருப்பதி ஏழுமலையானை வரும் ஜூலை மாதம் குறிப்பிட்ட சில ஆர்ஜித சேவைகள் மூலம் தரிசிக்க குலுக்கல் முறையிலும் பக்தர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இதற்காக நாளை முதல் 20-ம் தேதி வரை பக்தர்கள் தேவஸ்தான இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள ஆர்ஜித சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
திருக்கல்யாணம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை உள்ளிட்டவற்றுக்கான டிக்கெட்களை 22-ம் தேதியும் அங்கப்பிரதட்சனம், ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்களை 23-ம் தேதியும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் டிடிடி என்கிற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஒதுக்கீட்டு முன்பதிவு செயல்முறை ஏப்ரல் 18 முதல் 27 வரை திறக்கப்படும். மூத்த குடிமகன்கள், மாற்று திறனாளி பக்தர்கள் 23-ம் தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்ளலாம். ஏப்ரல் மாதம் 24-ம் தேதி காலை 10 மணிக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
+ There are no comments
Add yours