தேங்காய் மிளகு நண்டு இப்படி செஞ்சு பாருங்க: ருசி அல்லும்

Spread the love

சுவையான தேங்காய் மிளகு நண்டு எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நண்டு- கால் கிலோ

மிளகாய் தூள்- 1 டேபிள் ஸ்பூன்

மிளகு- 1 டீஸ்பூன்

எண்ணெய்-
தேவைக்கேற்ப

இஞ்சி, பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

கரம் மசாலா- அரை ஸ்பூன்

வெங்காயம்- 1

தக்காளி- 2

சோம்பு- அரை டீஸ்பூன்

உப்பு- தேவைக்கேற்ப

மஞ்சள் தூள்- அரை டீஸ்பூன்

கால் கப்- தேங்காய் துருவல்

செய்முறை:

முதலில் நண்டைச் சுத்தம் செய்து கழுவி நீரை வடித்து இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

வெறும் வாணலியில் தேங்காய் துருவல், மிளகு இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பின்னர் ஊற வைத்த நண்டில் வறுத்த தேங்காய் துருவல், மிளகு சேர்த்து மீண்டும் 10 நிமிடங்கள் ஊறவிடவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து குழையும் வரை வதக்கி விட்டு, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலாத் தூள் சேர்த்து வதக்கவும். நன்றாக வதங்கியதும் ஊற வைத்த நண்டைச் சேர்த்து பிரட்டி விடவும்.

பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி வைத்து வேகவிடவும். வெந்ததும் கிளறி விட்டு இறக்கவும். இப்போது சுவையான தேங்காய் மிளகு நண்டு தயார்.

இந்த தேங்காய் மிளகு நண்டினை சுடு சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours