சுவையான செட்டிநாடு கணவாய் கிரேவி இப்படி செய்து பாருங்க!!

Spread the love

சுவையான செட்டிநாட்டு கணவாய் கிரேவி எப்படி செய்யலாம் என்று இங்கே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

கனவா 500 கிராம்
வெங்காயம் – 20
பூண்டு – 8 பல்
இஞ்சி – 1/2 விரல் அளவு
மல்லி – 2 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
வர மிளகாய் – 3
பட்டை – 2
கிராம்பு – 2
அண்ணாச்சி பூ – 1
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எண்ணெய் தேவையான அளவு
கொத்தமல்லி சிறிது

செய்முறை:

முதலில் ஒரு கடாயில் மல்லி, சீரகம் சோம்பு வரமிளகாய் பட்டை கிராம்பு அண்ணாச்சி பூ இவைகளை சேர்த்து வறுக்கவும். ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்ததை போட்டு அரைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி தாளித்து சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவை சேர்த்து மஞ்சள் தூள் சிறு சேர்த்து உப்பு போடவும். எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். இதனுடன் கனவாயை சேர்த்து நன்கு வேக விடவும். இறுதியாக கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

சுவையான செட்டிநாட்டு கணவாய் கிரேவி ரெடி.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours