கற்றாழை வறட்சியான பகுதிகளிலும் வளரக்கூடிய ஒரு மருந்துச் செடி வகையாகும். இது பல்வேறு அழகுச் சாதனங்கள் மருந்துப் பொருட்கள் தயாரிப்பதற்கு பெரிதும் பயன்படுகின்றது. கற்றாழை இலையிலிருந்து எடுக்கப்படும் ஜெல் சருமத்தின் ஈரத்தன்மையை (Moisture) பாதுகாக்கப் பயன்படுகிறது. கற்றாழையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உண்டு அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.
கற்றாழை அல்சர் நோய்க்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்பட்டது.
தினமும் புதிதாக கற்றாழையின் சோற்றை எடுத்து தோலின் மீது பூசி வர வெண்படை நீங்கும்.
கற்றாழையின் சாறை இரவு வேளையில் முகத்தில் தேய்த்து காலையில் வெந்நீரால் கழுவ முகத்தில் உள்ள கருமை நீங்கி முகம் பொலிவு பெறும்.
கற்றாழைச் சோறு ஒரு துண்டுடன், ஒரு ஸ்பூன் கடுக்காய்ப் பொடி சேர்த்து உடன் சிறிது பனங்கற்கண்டும் சேர்த்து உண்டு வர நீரடைப்பு, நீர்க்கோவை, மலச்சிக்கல் போன்றவை அனைத்தும் அகலும்.
கற்றாழைக் களிம்பை வாதநோய் கண்ட இடத்தில் தொடர்ந்து தேய்த்து வந்தால் வாதம் குணமடையும்.
முகத்திலுள்ள கரும்புள்ளிகள் தழும்புகள் வெயில் பாதிப்புகள் உலர்ந்த சருமம் என சரும நோய் எதுவாக இருந்தாலும் சிறிது கற்றாழைச் சாறை தினமும் தடவி வர நல்லா பலன் கிடைக்கும்.
கற்றாழை மடலை வதக்கி சாறு எடுத்து இருதுளி காதில் விட சீழ் வருவது நிற்கும்.
அடிபட்ட வீக்கங்கள் மேல் கற்றாழை சதையைப் பூசி வர வீக்கம் குறைந்து விடும்.
நமது தோலில் நீரை விட நான்கு மடங்கு வேகமாக கற்றாழைச் சாறு ஊடுருவக் கூடியது. வைட்டமின் சி மற்றும் பி சத்துகளும் தாதுக்களும் நிறைந்தது இச்சாறு.
கண்நோய் கண் எரிச்சலுக்கு கற்றாழைச் சோற்றை கண்களின் மேல் வைக்கலாம். விளக்கெண்ணெயுடன் கற்றாழைச் சோறைக் காய்ச்சி காலை மாலை என இரு வேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வர உடல் அனல் மாறி மேனி பளபளப்பாகத் தோன்றும். நீண்ட கால மலச்சிக்கல் நீங்கும். கல்லீரல் ஆரோக்கியமாக விளங்கும்.
கேசப் பராமரிப்பில் தலைக்கு கறுப்பிடவும் கேசத்தின் வளர்ச்சியைத் தூண்டவும் பயன்படுகிறது. தலையில் ஏற்படும் கேசப் பிரச்னைகள் மற்றும் பொடுகை நீக்குகிறது.
சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.
கற்றாழை சோறை தேங்காய் எண்ணெயுடன் காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர கேசம் நன்கு செழித்து வளரும். எண்ணெய் குளியல் செய்ய கண் குளிர்ச்சி மற்றும் சுக நித்திரை வரும்.
சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.
சதைப்பிடிப்புள்ள மூன்று கற்றாழையின் சதைப் பகுதியச் சேகரித்து ஒரு பாத்திரத்தில் வைத்து, இதில் சிறிது படிக்காரத் தூளைத் தூவி வத்திருந்தால், சோற்றுப் பகுதியில் உள்ள சதையின் நீர் பிரிந்து விடும். இந்த நீருக்குச் சமமாக நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்து நீர் சுண்டக் காய்ச்சி எடுத்து வைத்துக்கொண்டு, தினசரி தலைக்குத் தடவி வந்தால் கூந்தல் நன்றாக வளரும்.
ஆண்கள் சவரம் செய்யும் பொழுது ஏற்படும் கீறல்கள், தீக்காயங்கள் மற்றும் அனைத்து காயங்களுக்கும் உடனடி நிவாரணம் பெற கற்றாழைச் சாறை பயன்படுத்தலாம்.
+ There are no comments
Add yours