ஜஸ்ட் ஒரு மணி நேரம் தூங்காவிட்டால் என்ன ஆகும்?

Spread the love

ஸ்லீப் ரிசர்ச் சொசைட்டியின் ஆய்வின்படி, ஒரு மணிநேர தூக்கத்தை இழந்தால் அதிலிருந்து மீள 4 நாட்கள் ஆகும் என்றும் மருத்துவர் தெரிவித்துள்ளார். முடிவெடுத்தல் மற்றும் கவனம் உள்ளிட்டவற்றிற்கு தூக்கம் முக்கியமானது என்று ஆராய்ச்சி எடுத்துரைக்கிறது.

மேலும், தூக்கம் இழந்தால் மூளையின் திறனும் பலவீனமடைகிறது. உடல் உறுப்புக்கள் சீராக இயங்கவும், சுறுசுறுப்பாக இருக்கவும் நல்ல ஆழ்ந்த தூக்கம் தேவை. தூங்காமல் இருப்பது உடலின் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதாவது, தலைவலி, எரிச்சல், மோசமான முடிவெடுப்பது மற்றும் கவனமின்மை போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளார்.

பல நாட்கள் தொடர்ச்சியாக சிறிய அளவிலான தூக்கத்தை இழப்பதன் ஒட்டுமொத்த எதிர்மறை விளைவு என்பது, ஒரே இரவில் பல மணிநேரங்கள் தூங்காமல் இருப்பதால் அறிவாற்றல் திறன்களில் ஏற்படும் கணிசமான தாக்கங்களை போல இருக்கலாம். எனவே சீரான தூக்கத்தை பின்பற்றி நமது உடலை பராமரிக்க வேண்டும்.

கூடுதலாக, உறங்குவதற்கு முன் காஃபின் மற்றும் அதிக உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் தூக்கத்தின் இழப்பை தவிர்க்கலாம்.
மேலும், வழக்கமான பிஸிக்கல் ஆக்ட்டிவிட்டி செய்வது, சிறந்த தூக்கத்தை மேம்படுத்தும். சிறிய அளவிலான தூக்கம் பாதிக்கப்பட்டால் கூட, ஒருசிலருக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.

உதாரணமாக, குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு அதிக தூக்கம் தேவைப்படுகிறது, மேலும் ஒரு சிறிய தூக்கமின்மை கூட அவர்களின் கற்றல் திறனை பாதிக்கலாம்.

தூக்கமின்மை காரணமாக வயதானவர்களும் எளிதில் பாதிக்கப்படலாம். மூச்சுத்திணறல் அல்லது மனநலக் கோளாறுகள் போன்ற நாள்பட்ட உடல்நலக் குறைபாடுகள், தூக்கமின்மையின் அறிகுறிகளாக இருக்கலாம் என்றும் மருத்துவர் கூறியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours