உடலுறவின் போது சிலருக்கு வலி ஏற்படலாம். இந்த வலி சில நேரங்களில் வஜைனல் ஸ்டீனோசஸ் காரணமாகவும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
அந்த வகையில், வஜைனல் ஸ்டீனோசஸ் ஏற்படுவதற்கான ஒரு சில காரணங்கள் பற்றி பார்க்கலாம்.
வஜைனல் ஏஜெனிசிஸ் அல்லது வஜைனல் செப்டம்.
பிறப்பு உறுப்பு அல்லது கர்ப்பப்பை வாய் பகுதியில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சைகள்.
குழந்தை பிறப்பின் பொழுது ஏற்பட்ட பெல்விக் டிராமா அல்லது தீவிரமான பிறப்புறுப்பு தொற்றுகள்.
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது ரெக்டல் புற்றுநோய்க்காக செய்யப்பட்ட ரேடியேஷன் தெரபி.
பிறப்பு உறுப்பு பகுதியில் நாள்பட்ட வீக்கம்.
வஜைனல் ஸ்டீனோசிஸின் சில அறிகுறிகள்.
வஜைனல் ஸ்டீனோசிஸுக்கான அறிகுறிகள் என்பது பிறப்புறுப்பு கால்வாய் எந்த அளவிற்கு குறுகி உள்ளது என்பது பொருத்து அமைகிறது. அவற்றில் சில பின்வருமாறு –
உடலுறவு கொள்வதில் சிரமம் அல்லது வலி.
பிறப்பு உறுப்பு பகுதியில் குறைவான மசகு.
பிறப்பு உறுப்பு வறட்சி.
பெல்விக் பகுதியில் வலி அல்லது அசௌகரியம்.
சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற அவசரம் அல்லது அடிக்கடி சிறுநீர் கழித்தல்.
அடிக்கடி பிறப்பு உறுப்பில் தொற்று அல்லது எரிச்சல்
வஜைனல் ஸ்டீனோசிஸ் எவ்வாறு பாலியல் வாழ்க்கையை பாதிக்கிறது?
வலி மிகுந்த உடலுறவு… வஜைனல் ஸ்டீனோசிஸ் காரணமாக ஏற்படக்கூடிய மிகவும் பொதுவான விளைவுகளில் இதுவும் ஒன்று. அதிலும் குறிப்பாக ஆணுறுப்பு மிக ஆழமாக செல்லும் பொழுது தாங்க முடியாத வலி ஏற்படுகிறது. குறுகிய அல்லது சிறிய பிறப்புறுப்பு கால்வாய் இருப்பதினால் ஒரு சில நிலைகளில் உடலுறவு கொள்வதை அசௌகரியமாகவும் வலி மிகுந்ததாகவும் அந்த பெண் உணரலாம்.
ஆணுறுப்பை உள்ளே செலுத்துவதில் சிக்கல்… பிறப்புறுப்பு கால்வாயின் நீளத்தை விட ஆணுறுப்பு நீளமாக இருக்கும் பட்சத்தில் அதனை உள்ளே செலுத்துவது சவாலான காரியமாக அமையலாம். இதனால் எரிச்சல் ஏற்பட்டு, உடல் உறவில் திருப்தி அடைவது கடினமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours