குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பாலை வைத்து செய்யக்கூடிய சுவையான ரசகுலா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால்- 4 கப்
லெமன் ஜஸ்- 2 ஸ்பூன்
சர்க்கரை- 3 கப்
தண்ணீர்- தேவைக்கேற்ப
ஏலக்காய்- 2(பொடியாக்கியது)
செய்முறை:
முதலில் பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்கு கொதிக்க விட வேண்டும்.
பால் நன்கு கொதிக்கும் போது அதில் லெமன் ஜஸ் விட்டு திரியும் வரை
கிளற வேண்டும்.
அதன் பிறகு நன்கு திரிந்ததும் அதை ஒரு காட்டன் துணியில் வடிகட்டி வைக்கவும்.
பின்பு அதில் இருந்து எடுக்கும் பன்னீரை குளிர்ந்த தண்ணீரில் அலசி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதிலிருந்து தண்ணீர் போனதும் அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
அதன் பின்பு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, தண்ணீர், ஏலக்காய் போட்டு நன்கு கொதிக்க விடவும்.
கொதிவந்ததும் அதில் செய்து வைத்துள்ள பன்னீர் உருண்டைகளை போட்டு 15-20 நிமிடம் வேக வைத்து இறக்கி விடவும்.
பின்பு அதை ஆறவைத்து ஃப்ரிட்ஜில் 4 மணி நேரம் வைத்து விட வேண்டும். பின்னர் எடுத்து பரிமாறினால் சுவையான ரசகுலா தயார்.
+ There are no comments
Add yours