ஐஆர்சிடிசி பயனாளர்கள் கணக்கை சரி பார்க்க ரயில்வே துறை அறிவுரை!

Spread the love

ரயில் டிக்கெட் புக் செய்யும் ஐஆர்சிடிசி கணக்கை நீண்ட நாட்கள் பயன்படுத்தாத பயனாளர்கள் கணக்கை சரி பார்க்க ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

உலக அளவில் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தைக் கொண்டது இந்தியன் ரயில்வே. இதன் மூலம் நாள்தோறும் 2.3 கோடி மக்கள் பயணிக்கின்றனர். இதில் நேரடியாக டிக்கெட் பெறுவது மட்டுமின்றி, ஆன்லைன் மூலமாகவும் பெரும்பாலானவர்கள் டிக்கெட் புக் செய்கின்றனர். அதாவது, சராசரியாக தினமும் 12 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் ரயில் டிக்கெட்களை புக் செய்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஆன்லைன் வழியாக பலர் தொடர்ந்து டிக்கெட் புக் செய்வார்கள். ஒரு சிலர் எப்போதாவது மட்டும் டிக்கெட் புக் செய்வார்கள். இதில் அவ்வபோது அல்லது எப்போதாவது ஐஆர்சிடிசி ஆப் அல்லது இணைய தளம் வாயிலாக டிக்கெட் முன் பதிவு செய்பவர்கள் தங்கள் கணக்குகளை ஒருமுறை சரிபார்க்குமாறு ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு ரயில்வே நிர்வாகம் ஐஆர்சிடிசி பயன்பாடு மற்றும் இணையதளம் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான விதிகளை மாற்றியது.

புதிய விதியின்படி, டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு முன், பயனர்கள் தங்கள் கணக்கைச் சரிபார்க்க வேண்டும். ஆனால், சுமார் 40 லட்சம் பயனர்கள் தங்கள் கணக்குகளை கடந்த 2 ஆண்டுகளாக சரிபார்க்கவில்லை என கூறப்படுகிறது.

தங்கள் கணக்கைச் சரிபார்க்காத பயனர்கள் எதிர்காலத்தில் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியாத சூழல் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி வழங்கியுள்ள விதிகளின்படி, ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன் பயனர்கள் தங்கள் மொபைல் எண் மற்றும் இ-மெயில் உள்ளிட்டவற்ற ஒருமுறை சரிபார்க்க வேண்டும். கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் அதையும் இணைத்துக்கொண்டால் மாதத்தில் அதிகபட்ச டிக்கெட்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்

அதாவது ரயில்வே தளம் அல்லது ஆப் மூலம் லாகின் செய்தால், மொபைல் அல்லது இ-மெயில் முகவரிக்கு ஓடிபி வரும். அதனை மீண்டும் உள்ளீடு செய்து கணக்கை சரிபார்த்துக்கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து, பயனாளர் ஆன்லைனில் ரயில் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. மொபைல் எண் அல்லது இ-மெயில் முகவரி மாறியுள்ளதா? ஐஆர்சிடிசி கணக்கு ரயில்வே சர்வரில் இருந்து நீக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ளவே இந்த சரிபார்ப்பு முறை கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours