புதுடெல்லி: உலக பொருளாதார அமைப்பு ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலாசெயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது,
கரோனா காலகட்டத்தில் உலக அளவில் பயணம் மற்றும் சுற்றுலா செயல்பாடுகள் பெரும் முடக்கத்தைச் சந்தித்தன. 2022-க்கு பிறகு அவை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கின.
இந்நிலையில் இந்தப் பட்டியலில் 2021-ம் ஆண்டு 54-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 39-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளன.
தெற்கு ஆசிய மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பயணச் செயல்பாடு மேம்பட்டு இருப்பதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours