ஜனவரி 20, 21 தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

Spread the love

தமிழகத்திற்கு பிரதமர் வருகையை ஒட்டி ராமேஸ்வரம் தீவு பகுதியில் ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இந்த நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து புண்ணிய தீர்த்தங்களை எடுத்துச் செல்வதற்காக, பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு தேதிகளில் சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் வருகை தர உள்ளார்.

அவரின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக ஜனவரி 20 மற்றும் 21 ஆகிய இரண்டு நாட்களில் ராமேஸ்வரம் பாம்பன் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்ட விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகள் ராமேஸ்வரம் மற்றும் பாம்பன் பகுதியில் தங்கு தளத்தில் இந்த இரண்டு நாட்களுக்கு உள்ளே கொண்டு வர அனுமதி இல்லை எனவும் ராமேஸ்வர மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி வருகையை ஒட்டி ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோவில் மத்திய, மாநில உளவு பிரிவு அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருக்கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலை சுற்றி தூய்மை மற்றும் ஆயத்த பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours