மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற கார் விபத்தில் சிக்கியதில் அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பர்தமான் என்ற பகுதியில் இருந்து கொல்கத்தாவுக்கு மம்தா பானர்ஜி இன்று ஹெலிகாப்டரில் செல்வதாக இருந்தது. மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் ஹெலிகாப்டர் பயணம் ரத்து செய்யப்பட்டு காரில் சென்றிருக்கிறார் மம்தா பானர்ஜி. கொல்கத்தா அருகே நெருங்கிய போது, சாலையில் எதிரே வேகமாக வந்த மற்றொரு காரில் மம்தா பானர்ஜி சென்ற கார் மோதும் நிலை உருவானது. இதனை தவிர்ப்பதற்காக கார் ஓட்டுநர் வேகமாக பிரேக் பிடித்துள்ளார்.
இந்த அதிர்வில் முதல்வர் மம்தா பானர்ஜியின் தலை முன்பக்க கண்ணாடியில் மோதியதாக தெரிகிறது. இதில் அவரது தலையில் லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் வீடு திரும்பினார். இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எதிரே வந்த கார் யாருடையது என்பது பற்றியும் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
+ There are no comments
Add yours