அண்ணா மற்றும் கருணாநிதி பற்றி பேசிய சோனியா காந்தி காமராஜரை மறந்து ஏன்..?

Spread the love

திமுகவின் மகளிர் உரிமை மாநாட்டில் அண்ணா மற்றும் கருணாநிதி பற்றி பேசிய சோனியா காந்தி காமராஜரை மறந்து ஏன் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

“சென்னையில் நடைபெற்ற மகளிர் உரிமை மாநாட்டில் திருமதி.சோனியா காந்தி அவர்கள் பெண்களை மேம்படுத்துவதில் கல்வியின் முக்கியத்துவத்தை குறிப்பிடும் போது தமிழக முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி பெயரை குறிப்பிட்டார்கள்.

கிராமப்புற குழந்தைகளின் கல்விக்காக 18,000 பள்ளிகளைத் திறந்து கல்வியில் சம வாய்ப்பு அளித்ததன் மூலம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வலுவான அடித்தளத்தை அமைத்து கொடுத்தவர் முன்னாள் முதல்வர் கர்மவீரர்,கல்விக்கண் திறந்த காமராஜர் .

தமிழக மக்களுக்கு இதுபோன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்த காமராஜர் அவர்களின் பெயரை கூட சொல்லாதது ஏன்? என தனது ஆதங்கத்தை அறிக்கை மூலம் தமிழிசை சௌந்தரராஜன் வெளிப்படுத்தியுள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours