ஆண்டின் கடைசியில் லட்சாதிபதியானவர்கள் !

Spread the love

கேரள லாட்டரித்துறையின் மூலம் இன்று பல லட்சங்களுக்கு அதிபதியானவர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநில அரசு லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து வருகிறது. அதன்படி நாள்தோறும் ஒவ்வொரு டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் மாலை 3 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித்துறையின் தலைமையகமான கார்க்கி பவனில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2023ஆம் ஆண்டின் கடைசி நாளான இன்று அக்ஷயா AK-632 லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது.

இதில் முதல் பரிசான 70 லட்சம் ரூபாய் AN 450400 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. இரண்டாம் பரிசான 5 லட்சம் ரூபாய் AN 366759 என்ற எண்ணுக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் பரிசான ஒரு லட்சம் ரூபாய், AN 926217 AO 342323 AP 526338 AR 188568 AS 128203 AT 408734 AU 100187 AV 640580 AW 382446 AX 259851 AY 192094 AZ 933541 ஆகிய எண்களுக்கு கிடைத்துள்ளது.

ஆறுதல் பரிசான தலா 8000 ரூபாய், AO 450400 AP 450400 AR 450400 AS 450400 AT 450400 AU 450400 AV 450400 AW 450400 AX 450400 AY 450400 AZ 450400 ஆகிய எண்களுக்கு கிடைத்துள்ளது. ஆனால் இந்த டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட ஏஜென்சிகள்,விற்பனை செய்யப்பட்ட ஏஜென்டுகள் மற்றும் அதிர்ஷ்ட டிக்கெட்டுகளை வாங்கியவர்கள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக சனிக்கிழமையான நேற்று காருண்யா லாட்டரி டிக்கெட்டுக்கான குலுக்கல் நடைபெற்றது. இதில் KB 686743 என்ற அதிர்ஷ்ட எண்ணுக்கு கிடைத்தது. இந்த டிக்கெட் கொட்டயம் ஏஜென்சியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது. ராமகிருஷ்ணன் என்ற ஏஜென்ட் இந்த டிக்கெட்டை விற்பனை செய்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours