இந்தியாவின் வளர்ச்சியை உலகமே பாராட்டுகிறது… பிரதமர் மோடி பெருமிதம்!

Spread the love

‘‘இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே பாராட்டுகிறது. இது நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது’’ என்று பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

குஜராத்திற்கு இரண்டு நாள் பயணமாக பிரதமர் நேற்று சென்றார். மெஹ்சானா மாவட்டம் கேராலு என்ற இடத்தில் நடந்த விழாவில் சுமார் 6,000 கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, “நிலத்தில் மட்டுமின்றி விண்வெளியிலும் இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று சாதனை படைக்கிறது. நிலவின் சந்திரயான்-3 வெற்றிகரமாக தரையிறங்கியது. இந்தியாவுக்கு உலகம் முழுவதும் பாராட்டு கிடைத்தது. பெண்களுக்கு அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டும் என்பதற்காக மகளிர் உரிமை மசோதாவை நிறைவேற்றினோம். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளோம்.

உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட ஜி20 மாநாட்டை எப்படி ஏற்பாடு செய்தோம் என்பதை பார்த்து உலகமே வியப்படைகிறது. கிராமங்களிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஏற்படுத்தி இருக்கிறோம். இந்தியாவின் வளர்ச்சி குறித்து உலகமே விவாதித்து பாராட்டுகிறது. இது நமக்கு பெருமிதம் அளிக்கிறது. நாட்டின் எல்லாப் பகுதிகளின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்தி வருகிறோம். நாட்டின் விரைவான வளர்ச்சிக்கு நிலையான ஆட்சிதான் காரணம்” என்று பிரதமர் மோடி பேசினார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours