இந்திய கம்யூனிஸ்ட் கேரள மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் காலமானார்!

Spread the love

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரளா மாநிலச் செயலர் கானம் ராஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கு வயது 73.

கடந்த மூன்று மாதங்களாக கானம் ராஜேந்திரன் நீரிழிவு நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்தார். மேலும் உடல் நலக்குறைவு காரணமாக கட்சியில் இருந்து அவர் விடுப்பும் எடுத்திருந்தார்.

இந்த நிலையில் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கானம் ராஜேந்திரன் காலமானதாக அதிகாரி ஒருவர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். மறைந்த கானம் ராஜேந்திரன், கடந்த 2015-ம் ஆண்டு முதல் கட்சியின் மாநிலச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.

1950-ம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த அவர், இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். 23 வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவான இளைஞர் பெருமன்றத்தின் மாநிலச் செயலாளரானார்.

இதனைத் தொடர்ந்து தனது 28வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமைப் பொறுப்பிற்கு வந்தார் கானம் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours