திருவனந்தபுரம்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகம் வந்த நிலையில், இன்று கேரளா செல்கிறார். லட்சத்தீவில் இருந்து கேரளாவின் திருச்சூருக்கு தனி ஹெலிகாப்டரில் சென்று தரையிறங்குகிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். திருச்சியில் நேற்று நடந்த விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று (புதன்கிழமை) கேரள மாநிலம் திருச்சூருக்கு வருகிறார். திருச்சூர் தேக்கின் காடு மைதானத்தில் நடைபெறும் பாஜக மாநில மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைக்கிறார். இதற்காக தனி ஹெலிகாப்டரில் லட்சத்தீவில் இருந்து திருச்சூர் அருகே குட்டநல்லூரில் உள்ள அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு மாலை 3.15 மணியளவில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகிறார் அங்கிருந்து கார் மூலம் சாலை மார்க்கமாக திருச்சூர் நகருக்கு வரும் பிரதமர். தொடர்ந்து 3.30 மணிக்கு சாலை பேரணி செல்கிறார். இதையடுத்து மாலை 4.15 மணிக்கு மகளிர் அணி மாநாட்டை தொடங்கி வைத்து பேசுகிறார்.
மாநாட்டில் கேரள மாநில பாஜதலைவர் சுரேந்திரன், நடிகர் சுரேஷ் கோபி, நடிகை ஷோபனா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்க உள்ளார். இந்த மாநாடு காரணமாக திருச்சூர் நகரம் முழுவதும் போலீஸ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர், கேரள போலீசார் பலத்த பாதுகாப்பு போட்டுள்ளனர். மாநாடு நடைபெறும் தேக்கின் காடு மைதானம் மத்திய பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் முழுமயாக கொண்டு வரப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடி வருகையையொட்டி குட்டநல்லூர் ஹெலிகாப்டர் இறங்கு தளத்தில் இருந்து திருச்சூர் நகர், தேக்கின் காடு மைதானம் வரை வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் திருச்சூருக்கு வருகை தரும் போது அவரை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை பாஜக பிரம்மாண்டமாக செய்துள்ளது.
+ There are no comments
Add yours