இமாச்சல பிரதேசத்தில் வேகமாக பரவும் காட்டுத்தீக்கு பல நூறு ஏக்கர் வனம் அழிந்துள்ளதோடு, ஏராளமான வன விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இமாச்சல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் உள்ள பாட்லிகுஹால் வனப்பகுதியில் நேற்று காட்டுத் தீ ஏற்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வனம் எரிந்து நாசமாகியுள்ளது. காற்றின் வேகம் காரணமாக மற்ற இடங்களுக்கும் தீ பரவி வருகிறது. இதனால் ஏராளமான மரங்கள் தீக்கிரையாகின.
இந்தக் காட்டுத்தீயில் சிக்கி வன விலங்குகளும் உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. எங்கு திரும்பினாலும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த தீ விபத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான வன வளம் அழிந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இமாச்சலப் பிரதேசத்தில் 13,275.17 ஹெக்டேர் வனப்பகுதி உள்ளது. இந்த 2023-2024 நிதியாண்டில் இதுவரை 263 முறை அம்மாநிலத்தில் வனத் தீ ஏற்பட்டுள்ளது. அதில் 571.67 ஹெக்டேர் நிலப்பரப்பு முழுவதும் அழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours