பாஸ்பேட்டிக், பொட்டாசிக் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உரங்களுக்கான மானியத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
இது விவசாயிகளுக்கு நற்செய்தியாக அமைந்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், DAP உரம் ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும். DAP உரம் உலகளவில் உயர்ந்த போதிலும் விவசாயிகளுக்கு ஒரு மூட்டை ரூ.1,350 என்ற விலையிலேயே தொடர்ந்து கிடைக்கும் என உறுதி அளித்தார்.
இதுபோன்று, NKP உரம் ஒரு மூட்டை ரூ.1,470 என்ற விலையில் தொடர்ந்து கிடைக்கும் என கூறினார். பாஸ்பேடிக் மற்றும் பொட்டாசிக் (P&K) உரங்களுக்கு 2023-24 (01.10.2023 முதல் 31.03.2024 வரை) RABI பருவத்திற்கான மானியம் (NBS) விகிதங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நைட்ரஜன் உரம் ஒரு கிலோவுக்கு ரூ.47.2 ஆகவும், பாஸ்பரஸ் கிலோவுக்கு ரூ.20.82 ஆகவும், பொட்டாஷ் மானியம் கிலோவுக்கு ரூ.2.38 ஆகவும், கந்தக மானியம் ஒரு கிலோவுக்கு ரூ.1.89 ஆகவும் வழங்கப்படும் என்றும் டி.ஏ.பி உரத்துக்கு டன்னுக்கு ரூ.4,500 மானியம் வழங்கவும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours