எம்.பில்., பட்டப்படிப்பில் இனி சேர வேண்டாம் என மாணவர்களுக்கும், எம்.பில்., மாணவர் சேர்க்கையை நிறுத்த வேண்டும் என கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
எம்.பில்., பட்டப்படிப்பு கடந்த 1977ம் ஆண்டு முதல் பல்கலைக்கழகங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் எம்.எஸ்சி, எம்.ஏ போன்ற முதுநிலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் எம்.பில்., என்ற பட்டப்படிப்பை முடித்தால்தான் பல்கலைகள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு நியமனம் செய்யப்படுவர் என்ற தகுதி நிர்ணயம் பல வருடங்களாக வழக்கத்தில் இருந்து வந்தது.2022ம் ஆண்டு ஆசிரியர் பணியமர்த்தும் முறையை மாற்றியமைத்த பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), ஆசிரியர் பணிக்கு குறைந்தபட்ச தகுதியை நிர்ணயித்தது.
அதில் குறிப்பிட்டுள்ளபடி, எம்.பில்., பட்டம் என்பது இனி வழக்கத்தில் இருக்காது என தெரியவந்தது. இந்த நிலையில், எம்.பில்., பட்டப்படிப்பில் இனி சேர வேண்டாம் என மாணவர்களுக்கு யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. மேலும், எம்.பில்., நிறுத்தப்பட்டுள்ளதால் மாணவர் சேர்க்கையை நிறுத்த கல்லூரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
+ There are no comments
Add yours