ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான ஐஆர்சிடிசி-யின் இணையதள சேவை முடங்கியுள்ளது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி இணையதள சேவையைப் பயன்படுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மத்திய ரயில்வே துறையின் இந்த சேவையைப் பயன்படுத்தி பயணங்களை மேற்கொள்ளும் பயணிகள் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்வது வழக்கம்.
இந்நிலையில், ஐஆர்சிடிசி தனது எக்ஸ் தளத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இ-டிக்கெட் சேவை தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் குழு இந்த சேவையை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டு, இ-டிக்கெட் சேவை தொடங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதற்கு முன்பாக, கடந்த ஜுலை மாதத்தில், இதேபோல் இ-டிக்கெட் சேவை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக முடங்கியது. அதன்பின்னர் சரிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours