நிவாரண நிதியில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், முதலமைச்சர் உள்ளிட்ட 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து கேரளா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளா லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆர்.எஸ். சசிகுமார் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 18 அமைச்சர்கள் தங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி, முதலமைச்சர் நிவாரண நிதியை தனிப்பட்ட நலன்கள் மற்றும் ஊழல் செய்யும் நோக்கத்துடன் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி இருந்தார்.
மேலும், முதலமைச்சரின் நிவாரண நிதியைத் தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் முதலமைச்சர் மற்றும் அவருக்கு கீழ் பணியும் 18 அமைச்சர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” எனக்கோரி இருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சிரியாக் ஜோசப், பாபு மேத்யூ ஜோசப், ஹருண் உல் ரஷீத் ஆகியோர் அடங்கிய அமா்வு கடந்த ஆண்டு நவம்பர் 13-ம் தேதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் அளித்த அந்த உத்தரவில், ‘பேரிடா் காலங்களில் முதலமைச்சர் எடுத்த முடிவுகள் தன்னிச்சையாக இருந்தாலும், அரசியல் உள்நோக்கத்துடன் மட்டுமே எடுக்கப்பட்டன என்பதை தீர்மானிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. அதேபோல் புகார் அளித்தவரின் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை’ என தீர்ப்பு வழங்கியிருந்தனர்.
இந்த நிலையில் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கேரளா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தேசாய், நீதிபதி அருண் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது இதுதொடர்பாக விளக்கம் அளிக்க கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அவரது அமைச்சரவையில் இருந்த 18 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours