காங்கிரஸ் திமுக இடையிலான மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இன்னும் இறுதியாகவில்லை. தொகுதிப்பங்கீடு உறுதியாகும் வரை திமுகவின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி–க்களுக்குஉத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது.
2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் 8 தொகுதிகளில்அக்கட்சி வென்றது. எனவே இந்த தேர்தலில் கூடுதல் இடங்களை பெறவேண்டும் என காங்கிரஸ் கணக்குப்போட்டது. ஆனால் இம்முறை 6 – 7 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என திமுக கறார் காட்டுவதாகசொல்லப்படுகிறது. எனவே இருதரப்பிலும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இன்னும் ஜவ்வாகஇழுத்துக்கொண்டிருக்கிறது.
இந்த சூழலில்தான், நேற்று நடைபெற்ற கருணாநிதி நினைவிடம் திறப்பு விழாவில், திமுக கூட்டணியில் உள்ளகாங்கிரஸ் எம்.பி.க்கள் யாருமே கலந்து கொள்ளவில்லை என்பது இப்போது தமிழக அரசியலில் சலசலப்பைஉருவாக்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 8 காங்கிரஸ் எம்.பி.க்களும் இந்த விழாவில் கலந்து கொள்வதாகஇருந்ததாம். ஆனால், “விழாவில் கலந்து கொள்ள வேண்டாம் ” என்று காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டதாகதகவல்கள் வெளியாகியுள்ளது. தொகுதிப் பங்கீட்டில் திமுக கறார் காட்டுவதால் காங்கிரஸ் மேலிடம் இந்த முடிவைஎடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார்இருவரும் விழாவுக்கு போகக்கூடாது என்பதால் தான், கடைசி நேரத்தில் அவர்களையும் டெல்லி அழைத்ததாம்காங்கிரஸ் மேலிடம். தொகுதிப் பங்கீட்டில் திமுக மீது அதிருப்தியில் இருப்பதை காட்டுவதற்காகவே இப்படிப்பட்டமுடிவு எடுக்கப்பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ் வட்டாரம். மேலும் இன்னொரு பக்கம் காங்கிரஸை தனது பக்கம்இழுக்க அதிமுகவும் தூண்டில் போட்டுக்கொண்டுள்ளது. எனவே தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் கூட்டணிஉச்சகட்ட குழப்பத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
+ There are no comments
Add yours