ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்று வரும் மோதலில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 2 பேர் ராணுவ அதிகாரிகள் என்றும், 2 பேர் ராணுவ வீரர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜோரி பகுதியில் நடைபெற்று வரும் இந்த என்கவுன்டரில் அவர்கள் நால்வரும் உயிரிழந்துள்ளனர். அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சிறப்புப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் கடந்த 19-ம் தேதி நிகழ்விடத்துக்கு விரைந்தனர்.
அந்தப் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் உறுதியானதை தொடர்ந்து இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கி தாக்குதல் நடந்து வருகிறது. இதில் தீவிரவாதிகள் காயமடைந்து உள்ளதாகவும், அவர்களை ராணுவத்தின் சுற்றி வளைத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியின் போது ராணுவத்தை சேர்ந்த நான்கு பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர். அந்த பகுதியில் தேடுதல் வேட்டை தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours