இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, இன்றைய தினம்(பிப்.17) தனது ஆட்சியின் இரண்டாவது மாநிலபட்ஜெட்டை தாக்கல் செய்தார். 2024-25ம் நிதியாண்டுக்கான இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பாக பசு மற்றும்எருமைப்பாலின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளார். வேளாண்விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வேண்டும் என்பது, டெல்லியை நோக்கி பேரணியாககிளம்பியிருக்கும் விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த சூழலில் விவசாயிகளின் இன்னொருவருமான ஆதாரமான பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்தி இமாச்சல பிரதேச அரசு அறிவித்திருப்பதுகவனம் பெற்றுள்ளது.
மாநிலத்தின் நிதி இலாகாவையும் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, பசும்பாலுக்கானகுறைந்தபட்ச ஆதரவு விலையை லிட்டருக்கு ரூ38-லிருந்து ரூ45 ஆகவும், எருமைப்பால் லிட்டருக்குரூ.38லிருந்து ரூ.55 ஆகவும் உயர்த்தி அறிவித்துள்ளார். 2 ஆண்டுகளுக்கு முன்னர் டெல்லி எல்லையில் ஒருவருடத்துக்கும் மேலாக முகாமிட்டு போராடிய விவசாயிகளின் பிரதான கோரிக்கையாக வேளாண்விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது இருந்தது. விவசாயிகளின் தற்போதை போராட்டகளத்திலும் இதுவே முதன்மையான கோரிக்கையாக அமைந்துள்ளது.
விவசாயிகளின் போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி வெளிப்படையான ஆதரவு தெரிவித்திருப்பதன் மத்தியில், காங்கிரஸ் ஆளும் மாநிலமான இமாச்சல் பிரதேசம் பாலுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை தந்திருப்பது கவனம்ஈர்த்துள்ளது. இன்று தாக்கலான பட்ஜெட்டில், பாலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டுமன்றி, விவசாயிகள்நலன்நாடும் வேறு பல அறிவிப்புகளையும் முதல்வர் சுகு அறிவித்துள்ளார். விவசாயத் துறைக்கு ரூ.582 கோடியும், தோட்டக்கலைத் துறைக்கு ரூ.300 கோடியும் ஒதுக்கீடு செய்துள்ளதோடு, கடந்த ஆண்டு பருவமழைக்கான பேரிடர்நிவாரண நிதியாக ரூ.4,500 கோடியை முதல்வர் அறிவித்துள்ளார். இத்தோடு மழை நிவாரணத்துக்கு என மத்தியஅரசு எந்த தொகுப்பையும் விடுவிக்கவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
இமாச்சல் பிரதேசத்தின் தனி அடையாளமான ஆப்பிள் விற்பனையை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்தும்வகையில், ஆப்பிள் பேக்கேஜிங்கிற்காக உலகளாவிய அட்டைப்பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றுஅறிவித்துள்ளார். 2026-ம் ஆண்டுக்குள் இமாச்சலப் பிரதேசத்தை பசுமையான மாநிலமாக மாற்றுவதற்கான மாநிலஅரசின் தீர்மானத்தை அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார். ‘ராஜீவ் காந்தி பிரக்ரியாத் கெதி யோஜ்னா’ என்ற பெயரில்இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், பஞ்சாயத்து தோறும் 10 விவசாயிகள் என மொத்தம் கீழ்36,000 விவசாயிகளுக்கு இயற்கை வேளாண் நுட்பங்களில் பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்
+ There are no comments
Add yours