2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) மூத்த தலைவரும், மகாராஷ்டிரா மாநில துணை முதல்வருமான அஜித் பவார் கூறியுள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. மத்திய ஆட்சிக் கட்டிலில் உள்ள பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்பட 28 கட்சிகள் சேர்ந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதன் ஆலோசனை கூட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையை வீழ்த்த இந்தியா கூட்டணி பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது. இது வரை இந்த கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி) மூத்த தலைவர்களில் ஒருவரும், மகாராஷ்டிரா துணை முதல்வருமான அஜித் பவார் மும்பையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம், 2024 மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் திட்டம் குறித்து செய்தியாளர்கள் வினா எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அஜித் பவார்,” தற்போதைய நிலவரப்படி நாட்டில் பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் வேறு யாரும் இல்லை” என்றார். மேலும், ” இதுபோன்ற முடிவானது ஓரிரு விஷயங்களை மட்டும் அடிப்படையாக வைத்து எடுக்கப்படாது, பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படுகிறது” என்றார்.
+ There are no comments
Add yours