திரைப்பட பாணியில் நடிப்பதை போன்று ஆந்திர மாநில நாடாளுமன்றத்தில் பாலகிருஷ்ணாமீசையை முறுக்கி தொடையை தட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையின் மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.அப்போது செப்டம்பர் 9 ஆம் தேதி ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என்று தெலுங்கு சேத கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் சந்திரபாபு கைது தொடர்பான வழக்கு தீர்மானத்தை சபாநாயகர் தம்மினேனி சீதாராம் நிராகரித்ததையடுத்து டிடிபி எம்எல்ஏக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கேள்வி நேரம் தொடங்கியவுடன் சபாநாயகர் தம்மினேனி சீத்தராமை அவரது மேடையில் ஏறிய தெலுங்கு தேச கட்சியினர் பொய் வழக்குகளில் சிக்கவைத்ததாகக் கூறப்படும் கோஷங்களை எழுப்பியதால், பெரும் பரப்பரப்பு நிலவியது.
எம்எல்ஏ வுண்டவல்லி ,ஸ்ரீதேவி (தாடிகொண்டா) உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏக்கள் கேள்வி நேரத்தை சீர்குலைக்கக்கூடாது என சபாநாயகரின் எச்சரிக்கைக்கு நாடாளுமன்றத்தில் பாலகிருஷ்ணா மீசையை முறுக்கி தொடையை தட்டி செய்கை காண்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனால் கோபம் அடைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நீர்வளத்துறை அமைச்சர் அம்பதி ராம்பாபு இது பொதுப் பிரச்னைகள் குறித்து விவாதிக்கும் அரங்கம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் அநாகரிகமான நடத்தையால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களை தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து தூண்டினால் அசம்பாவிதங்கள் நிகழும் அபாயம் உள்ளது என எச்சரித்தார்.
மேலும் அமைச்சர் ராம்பாபுவுக்கும், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ., நந்தமுரி பாலகிருஷ்ணா (இந்துப்பூர்) க்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அவை ஆந்திர சட்டப்பேரவையில் பரபரப்பை ஏற்படத்தியதை தொடர்ந்து அவை ஒத்திவைக்கப்பட்டது.
+ There are no comments
Add yours