திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 23 ஆம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவில் வண்ண வண்ண பூக்களாலும் வண்ண மின் விளக்குகளாலும் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1ஆம் ம் தேதி வரை பக்தர்கள் சொர்க்க வாசல் தரிசனம் செய்ய முடியும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியிருந்தது.
திருப்பதியில் வைகுண்ட வாசல் தரிசனம் செய்ய டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்தது. இதற்காக திருப்பதியில் 9 இடங்களில் 90க்கும் மேற்பட்ட கவுன்ட்டர்களில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு முதல் சொர்க்க வாசல் தரிசனத்துக்கான இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. ஒரு நாளைக்கு 42500 டிக்கெட்டுகள் 10 நாட்களுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.
முதல் மூன்று நாட்களிலேயே 10 நாட்களுக்குமான டிக்கெட்டுகள் தீர்ந்தன. டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டுமே வரும் ஜனவரி ஒன்றாம் தேதி வரை தரிசனம் செய்ய முடியும் என்பதால் புத்தாண்டு தினத்தில் டிக்கெட் இல்லாத பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரவேண்டாம் என்றும் திருமலை தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வைகுண்ட வாசல் தரிசனத்தை முன்னிட்டு பல்வேறு மாநில ஆளுநர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆகியோர் விவிஐபி தரிசனத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட வாசல் பிரவேசம் செய்தனர். இந்நிலையில் நாளையுடன் வைகுண்ட வாசல் பிரவேசம் நிறைவடைய உள்ளது. இதனை முன்னிட்டு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று தனது குடும்பத்துடன் தரிசனம் செய்தார்.
அவருக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் வி.ஐ.பி தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டு சொர்க்கவாசல் பிரவேசம் செய்தார். அமைச்சர் அன்பில் கேஷுக்கும் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கி கவுரவித்தனர்.
+ There are no comments
Add yours