அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி தாய்லாந்தில் 10 ஆயிரம் அடி உயரத்தில் ஸ்கை டைவிங்.
தேனி முன்னாள் கடற்படை அதிகாரி சாகசம்தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜ்குமார். கடற்படையில் அதிகாரியாக 15 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர், தற்போது ஸ்கை டைவிங் ஆய்வாளராகவும் இராணுவ வீரர்களுக்கு ஸ்கை டைவிங் பயிற்சியாளராகவும் உள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயிலில் கும்பாபிஷேக விழாவின் போது தாய்லாந்தில் பயிற்சியில் இருந்த ராஜ்குமார் சுமார் 10 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து “ஜெய் ஸ்ரீ ராம்” கொடியுடன் பறந்து சாகசம் புரிந்துள்ளார்.
+ There are no comments
Add yours