பாஜக வை கைவிட்ட அயோத்தி ராமர்.. உ.பி யில் பரிதாபம் !

Spread the love

பாஜக பெரிதும் நம்பியிருந்த உத்தரபிரதேசம் மாநிலத்தில் சுமார் பாதி இடங்களை பறிகொடுத்ததில் அக்கட்சியின் தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வென்றிருந்த 62 இடங்களுக்கு மாறாக, நடப்பு 2024 மக்களவைத் தேர்தலில் 33 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. கிட்டத்தட்ட பாதி இடங்களை பறிகொடுத்ததில் அங்கே பாஜகவின் டபுள் எஞ்சின் தடம் புரண்டிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் அபிப்பிராயம் தெரிவிக்கின்றனர்.

குஜராத்துக்கு அடுத்தபடியாக பாஜக அதிகம் நம்பியிருந்த மாநிலங்களில் முதன்மையானது உ.பி. 80 தொகுதிகளுடன் தேசத்தில் அதிக எண்ணிக்கையிலான எம்பிக்களை டெல்லிக்கு அனுப்புவதோடு, அங்கு பெரும்பான்மை பெறும் கட்சியே மத்தியில் ஆட்சியமைக்கும் என்ற எழுதப்படாத விதியும் உ.பி-க்கு உண்டு. இதற்காக அங்கே நடப்பு மக்களவைத் தேர்தலில் பாஜக தனது அத்தனை அஸ்திரங்களையும் பிரயேகித்தது.

அவற்றில் பிரதானமாக அயோத்தி ராமர் கோயிலும் அதையொட்டிய பிரச்சாரங்களும் அமைந்திருந்தன. வகுப்புவாதம், வெறுப்பு, அவதூறு என நீண்ட அந்த பிரச்சார உத்திகள் கடைசியில் பாஜகவுக்கு கைகொடுக்கவில்லை. மேலும் ஸ்மிருதி இரானி, மேனகா காந்தி போன்ற நட்சத்திர வேட்பாளர்கள் அங்கே படுதோல்வி அடைந்தனர். ராஜ்நாத் சிங் போன்ற பெருந்தலைகள் வெற்றிக்கான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தில் கணிசமாக அடிவாங்கினார்கள்.

வாராணசி தொகுதியில் ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கும் மோடியின் வாக்கு எண்ணிக்கை வித்தியாசமும் இம்முறை ஆச்சரியமூட்டும் வகையில் அடிவாங்கியுள்ளது. இதுவே 2019 தேர்தலில் 4.79 லட்சமாக இருந்தது; இம்முறை 1.52 லட்சமாக குறைந்தது.

மாறாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் அதனுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸும் கணிசமான தொகுதிகளில் வெற்றியை பதிவு செய்திருந்தன. குறிப்பாக அமேதி தொகுதியில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் விசுவாசி கே.எல்.சர்மா வெற்றியடைந்திருக்கிறார். பாஜகவின் இந்த பின்னடைவால் அக்கட்சியின் தலைவர்கள் மீளாத அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours