மும்பையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளுக்கு ஒரே நேரத்தில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஜஸ்லோக், ரஹேஜா, செவன் ஹில் உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது.
காவல் துறையினரின் முதற்கட்ட தகவலின்படி மருத்துவமனையின் படுக்கைகள், குளியலறைகளில் வெடிகுண்டு உள்ளதாக சைப்ரஸ் நாட்டிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பதாகவும், மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் குறித்து விசாரித்து வருவதாகவும் மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மும்பை காவல் துறையின் கூற்றுப்படி, மின்னஞ்சல்கள் விபிஎன் நெட்வொர்க்கைப் பயன்படுத்தி அனுப்பப்பட்டுள்ளன. கேஎன்ஆர் என்ற ஆன்லைன் குழு இந்த புரளி மின்னஞ்சல்களுக்குப் பின்னால் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது. இந்தக் குழு இதற்கு முன்பு மே 1-ம் தேதி டெல்லியில் உள்ள பல பள்ளிகளுக்கு இதேபோன்ற அச்சுறுத்தல்கள் விடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours