தமிழக சட்டசபையில் கவர்னர் உரையாற்ற வந்த நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதத்தை அவமதித்ததாக கூறி அகில பாரத வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர்கள் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டம் நடத்தினார்கள்.
இந்த போராட்டத்துக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஏ.பி.வி.பி. தலைவர் உமேஷ் சந்திர அஜ்மீரா தலைமை தாங்கினார். நிர்வாகி விகாஸ் பட்டேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்கள் பேசுகையில் “தேசிய கீதம் என்பது தனிப்பட்ட நபருக்கு உரியது அல்ல, அது அரசியல் அமைப்பின் மரியாதைக்கு உரியது என்றும், அந்த மரியாதையை பாதுகாக்க வேண்டும்” என்றும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து திடீரென அவர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உருவப்பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
+ There are no comments
Add yours