சந்திரயான் 3 திட்டப் பொறியாளர் தற்போது இட்லி விற்கிறார்!

Spread the love

சந்திரயான் 3 திட்டத்திற்கு ஏவுதளம் அமைத்த பொறியாளர் ஊதியம் வழங்கப்படாததால், தற்போது இட்லி சுட்டு விற்று பிழைப்பு நடத்தி வருகிறார்.

நிலவுக்கு விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக அனுப்பிவிட்டது என்று உலக நாடுகள் அனைத்தும் பாராட்டு வரும் அதே நேரத்தில், அதே சந்திரயான் 3 திட்டத்தில் பணியாற்றிய பொறியாளர் ஒருவர் வாழ்வாதாரத்திற்காக இட்லி விற்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் பணியாற்றின. அந்த வகையில், ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி பகுதியில் உள்ள ஹெச்.இ.சி என்ற பொதுத்துறை நிறுவனமும் இணைந்து வேலை செய்தது.

மத்தியப்பிரதேச மாநிலம் ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா என்ற பொறியாளர் இந்த நிறுவனத்தில் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார்.

இவர், ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

இந்நிலையில் ஹெச்.இ.சி நிறுவனம் சுமார் 18 மாதங்களாக தங்களது 2,800 ஊழியர்களுக்கு சம்பளம் தரவில்லை. இதனால், தீபக் குமார், மகள்களுக்கு பள்ளி கட்டணம் கூட செலுத்த முடியாமல் சிரமப்பட்டார்.

எனவே செலவை சமாளிக்க, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டிடத்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார்.

காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours