சத்தீஸ்கரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் 7 நக்சலைட்டுகள் உயிரிழந்தார்கள்.
நாரயண்புர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்புர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஏழு நக்சலைட்டுகள் உயிரிழந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: நாராயண்புர் மாவட்டத்தின் தெற்கு அபுஜ்மாத் காட்டில், சத்தீஸ்கர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் ஆகியோர் இணைந்து நக்சலைட் எதிர்ப்பு நவடிக்கையில் ஈடுபட்டபோது, அதிகாலை மூன்று மணிக்கு இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு சம்பம் முடிந்த பின்பு, சீருடை அணிந்த ஏழு நக்சலைட்டுகளின் உடல்களை போலீஸார் மீட்டனர். அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை தொடர்கிறது.
சிஆர்பிஎஃப் குழுக்களைத் தவிர, நாராயண்புர், தண்டேவாடா, பஸ்தர் மற்றும் கொண்டேகான் மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த போலீஸாரும் இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்” என்று அவர் தெரிவித்தார்.
+ There are no comments
Add yours