நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புக் கூட்டத்தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற்று வருகிறது.
புதிய கட்டடத்தின் முதல் நாள் கூட்டத்தொடரில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் இன்றே தாக்கல் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் முன்னரே தெரிவித்து இருந்தார்.
அதன் படி, இன்று பிரதமர் மோடி உரையை தொடர்ந்து , புதிய நாடாளுமன்றத்தின் முதல் அலுவலக மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு தரும் மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தின் முதல் மக்களவை நிகழ்வான இந்த மசோதாவில், மாநில சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு இந்த மசோதா அமலில் இருக்கும். அதன் பிறகு வேண்டும் என்றால் நீட்டித்து கொள்ளலாம் என அறிவித்தார்.
நீண்ட ஆண்டுகளாக கிடப்பில் இருந்த மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இன்று மக்களவையில் தாக்கல் செய்து விவாதம் தொடங்கிய நிலையில், அடுத்ததாக நாளை மறுநாள் (வியாழன்) மாநிலங்களவையில் இந்த சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
+ There are no comments
Add yours