இன்று மாலை எனது இல்லத்தில் மூன்று சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன்..! பிரதமர் மோடி.!

Spread the love

தலைநகர் டெல்லியில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டை உலகமே தற்போது உற்று நோக்கும் வகையில் இந்தியா தலைமை தாங்கி நடத்தி வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ள ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் தலைவர்கள் தலைநகர் டெல்லிக்கு வருகை தந்த வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, தென் கொரியா, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா என 20 நாட்டுத் தலைவர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் டெல்லியில் பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் தற்போதுவரை நைஜீரிய அதிபர் போலா அகமது தினுபு, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ ஏஞ்சல் பெர்னாண்டஸ், மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜக்நாத் உட்பட பல தலைவர்கள் டெல்லி வந்தடைந்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை டெல்லி வந்தடைய உள்ளார்.

இந்த மாநாட்டிற்கு வருகை தரும் அமெரிக்கா, மொரீஷியஸ் உட்பட 15க்கும் மேற்ப்பட்ட நாட்டு தலைவர்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை அவரது இல்லத்தில் மூன்று இருதரப்பு சந்திப்புகள் இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, “இன்று மாலை, எனது இல்லத்தில் மூன்று இருதரப்பு சந்திப்புகளை எதிர்பார்க்கிறேன். மொரீஷியஸ் பிரதமர் குமார் ஜக்நாத், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் ஜோபிடன் ஆகியோரை நான் சந்திக்க உள்ளேன். இந்த நாடுகளுடனான இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மறுபரிசீலனை செய்வதற்கும், வளர்ச்சி ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கும் இந்த சந்திப்புகள் வாய்ப்பளிக்கும்.” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours